Thursday, June 26, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

மணமாலை சூடும் முன்னே
உன் மனம் அறிய வேண்டாமோ -
வேண்டுமென நினைத்தேன்
அறியத் தொடங்கினேன் உன்னை

அறிவதோ புது விஷயம்
நானோ விஷமின்றி ஏற்பேனோ -
கசப்புகள் இருந்தாலும் ஏற்பேன்
நல்வாழ்க்கை அது பயனுற

உன் வார்த்தைகள் எண்ணங்களைச் சொல்ல
என் எண்ணங்கள் உன் வார்த்தைகளை உட்கொள்ள
ஏற்றங்களும் ஏமாற்றங்களும் இருவரும் பகிர
தொடங்கியதே உரையாடல் தினம் தினம்

உன் ஆசைகள் ஏமாற்றங்களாய்
என் பேச்சோ உனக்கு கட்டளையாய்
மாறும் புது கோணங்களோ
தொடங்கின சிறு சிதறல்கள்

சிதறல்களை கருதாமல்
கருத்ததனை முன் நிறுத்தி
வாழ்க்கைப் பயணம் தொடர
நீ மகிழ்வுதனை நமக்காக கொண்டாயே

என் விளையாட்டுக்கள் குழப்பங்களாய்
என் பொய்களோ அதன் புன்னகையாய்
உன் நினைவில் அடுத்து இடம் பிடிக்க
நானோ விட்டேன் பொய் அதனை

என் எண்ணங்களை நீ அறிய
உன் எண்ணங்களை நான் அறிய
நம் வாழ்க்கையை வழி நடத்த
நாம் இணைந்தோமே மனமதிலே..
உணர்வோமே இனிய திருமணம் முதலே..

No comments: