வார்த்தைகள் உணர்வற்றதாய் இருக்கலாம்
மனமோ அவ்வண்ணம் இல்லை -
ஆசைகள் நிறைவேறாமல் இருக்கலாம்
அன்போ அப்பொருளரியாமல் இல்லை -
கனவுகள் களைந்து இருக்கலாம்
கண்மணியின் கவலை தெரியாமல் இல்லை -
வண்ணங்கள் கொண்ட வாழ்க்கையில்
எண்ணங்கள் அவதிப் படலாம்
ஆசைகள் நசுக்கப் படலாம் -
அன்பே,
உணர்வுகளும் உள்ளமும் உனக்கே என அறியாயோ -
மனமே,
இன்பம் எனக்கு நீ, உனக்கு நான் என அறியாயோ -
உயிரே,
உன்னிடம் உண்மையாய் இருப்பவனை அணைப்பாயே.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment