Tuesday, June 17, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

எண்ணங்கள் ஒன்றாக மாறுமோ
மாறினால் நிற்குமோ
நின்றால் நீடிக்குமோ -
கேள்விகள் பலவாய்
பொருளோ ஒன்றாய் நிலைப்பதுவே
காதல் செய்யும் காலம் -
இருவரையும் ஒன்று படுத்தும் காலம்

எண்ணங்கள் ஒன்றாய்
நின்றும் நீடித்தும் -
கேள்விகளே இல்லாமல்
பொருளறிந்து பரிமாரிக்கொள்வதே
திருமணம் செய்யும் காலம் -
இருவரையும் பிரிவில்லாமல் காணும் காலம்

அனைத்தும் ஒன்றாய் நிற்க
காலம் அதை வெல்லும் காலம் -
குடும்பமாய் வாழத்தொடங்கும் பொற்காலம் -
உயிரை உருவாக்கும் காலம் -
ஓர் புது உயிரை இப்புவியில் அறிமுகம் செய்ய

நாட்கள் ஓட ஓட
குழந்தையோ வளர
பொறுப்பை அங்கமாய் கொள்ளும் காலம் -
பெற்றோராய் வாழும் காலம் -
பொறுப்பரியும் காலம் அந்தோ
உயிரை இப்புவியில் வாழ வைக்கும் காலம்

பல வருடமாயினும்
புது உறவாய் வாழும் வசந்த காலம் -
உடல் முதிவை அடைந்தாலும்
மனம் மகிழ்வாய் இருக்கும் காலம் -
கடவுளை அடையவிருக்கும் காலம்

காலங்கள் பலவாயினும்
உயிர்கள் இரண்டே -
அவர்கள் பகிரும் அன்பே
காலங்களை வெல்லும் -
வாழ்வின் பொருளறிய வாழ வைக்கும் -
வெற்றியை அடைய வைக்கும்!!

No comments: