Wednesday, June 25, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

உன் மீது கோபம் கொண்டேன் -
உன் மீது பாசம் உள்ளதனால்;
உன்னைத் திட்டியதால் வருத்தம் கொண்டாய் -
நமக்கிடையே காதல் உள்ளதனால்;
உன்னைத் திட்ட எனக்கென்ன ஆசையா? - இல்லை -
திட்டியதோ உன்னிடம் கொண்ட அன்பின் தூண்டுதலால்;
அறியாயோ என்னை -
மனமது கலந்து உன்னை விரும்புவதை;
உன் எண்ணங்களை என்னிடம் கொள்வதை;
அன்பே -
என் வார்த்தைகள் நமக்கென அறிவாயே.

No comments: