திருமணம் என்னும் ஆரம்பம் -
அழைத்து வருமே பேரின்பம்;
தொடங்கும் ஒரு குடும்பம் - அதை
வாழ்த்தும் பல சொந்தம்;
புது உறவுகள் வந்திடும் -
இணையும் மனங்களுக்கு
பொறுப்போ இணைந்திடும் -
உறவினர்களின் எதிர்பார்ப்போ
பெரியோரின் ஆசிர்வாதமோ
வெளியே புரண்டோடிடும் -
ஆனந்தம் பரவ
ஆடவனின் பெற்றோரோ
புது உறவை தம்வீட்டிற்கு அழைக்க -
மணப்பெண்ணின் மனமோ
பெற்றோருடன் ஏங்க -
ஆடவனோ அவளை பார்க்க -
பெண்ணோ கண்ணீரில் இருந்திட -
இரு மனம் இணைய
புது உறவை ஏற்றிட
வாழ்க்கை பாதையை நடத்திட
இரு உள்ளங்களும் திடம் இருந்து
புது வாழ்வினை தொடங்கிடுமே -
மகிழ்வை அனைவருக்கும் அளித்திடுமே!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment