Friday, May 30, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

திருமணம் ஒரு பூட்டா??
ஆம் பூட்டு தான் -
இரு மனங்களை ஒரு மனமாய் பூட்டும் பூட்டு

இந்த பூட்டுக்கு ஒரு சாவி உண்டா??
ஆம் சாவி இருக்கிறது -
அதுதான் காதல் எனும் சாவி

இந்த பூட்டு பழுதுபடாதா??
பழுது படலாம் -
மனங்கள் இரண்டும் அன்பு பாராட்டாமல் இருந்தால்

இந்த பூட்டு பயன் படுமா??
பயன்படத்தான் இந்த பூட்டு -
சாவி சரியாய் பயன்பட்டால்

ஏ பூட்டே.. நீ இரு மனங்களை சேர்க்கிறாய்..
ஆனால் சாவியே உன்னை வாழ வைக்கிறது... அறிவாயே...
சாவி பழுது படாமல் பூட்டுடன் உபயோகித்தால், நீ பேரின்பம் அடைவாய்..
வாழ்வின் உபயோகம் அடைவாய்..

No comments: