தேன் நீ என சொன்னால், மயங்கிய தேனி நான் என சொல்வேன்
மலர் நீ என சொன்னால், மொய்க்கும் வண்டு நான் என சொல்வேன்
கடல் நீ என சொன்னால், கடல்வாழ் மீன் நான் என சொல்வேன்
காற்று நீ என சொன்னால், இனிய காற்றோசை நான் என சொல்வேன்
இனிப்பு நீ என சொன்னால், அதிலூரும் எறும்பு நான் என சொல்வேன்
கண் நீ என சொன்னால், உன் கண்மணி நான் என சொல்வேன்
உயிர் நீ என சொன்னால், தோன்றும் உணர்வு நான் என சொல்வேன்
நானே நீ என சொன்னால், நாம் ஓருயிர் என சொல்வேன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment